எக் பப்ஸ் (Egg buffs recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பத்தரத்தில் மைதா, உப்பு,தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
- 2
125கிராம் வெண்ணெய் ஐ 3பாகமாக பிரித்து வைக்கவும்
- 3
அதனை 2பாகமாக பிரித்து மாவு மேஜைமீது தூவி உருட்டவும் அதன்மீது சிறிது வெண்ணை தடவவும் பின் அதன்மீது சிறிது மாவு தூவவும் பின் மற்றொரு விரித்த ஷீட்டை வைக்கவும்
- 4
பின் அதனை இரு புறத்திலிருந்தும் மடிக்கவும் அதன்மீது மீண்டும் வெண்ணை தேய்த்து மற்றும் மாவு தூவி மீண்டும் ஏறுபுறத்திலிருந்தும் மடிக்கவும்
- 5
அதனை 1 மணிநேரம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
- 6
பின் அதனை மீண்டும் உருட்டவும் அதன்மீது வெண்ணை தேய்த்து மாவு தூவி மடிக்கவும் முதலில் செய்ததுபோல மீண்டும் செய்து பிரிட்ஜ்ல் 1 மணிநேரம் வைத்து எடுத்து 3 ஆவது முறை திரும்பவும் மடித்து பிரிட்ஜ்ல் 1 மணிநேரம் வைத்து எடுக்கவும்
- 7
அதனை தேய்த்து 6 முதல் 8 பாகமாக பிரித்து வைக்கவும்
- 8
மசாலா செய்ய :- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்
- 9
அத்துடன் மிளகு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் மசாலாவோடு சேர்ந்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 10
முட்டையை 2 துண்டாக வெட்டி வைக்கவும்
- 11
விரித்து 6 பாகமாக வெட்டிவைத்திருக்கும் ஷீட்டில் மசாலா மற்றும் முட்டை வைத்து 4 பகுதியிலிருந்தும் நடுவில் கொண்டுவந்து அழுத்தம் கொடுக்கவும் அதன்மீது ஒரு பிரஷ் வைத்து பால் தடவவும்
- 12
இப்பொழுது அதனை 200டிகிரி செல்சியஸ்யில் 10நிமிடம் ப்ரீ ஹீட் செய்த ஓவெனில் 20-22 நிமிடம் பேக் செய்து எடுக்கவும் சுவையான எக் பப்ஸ் ரெடி
- 13
குறிப்பு :- 1) வெண்ணெய் 3 மணிநேரத்துக்கு முன் எடுத்து வைக்கவும் பட்டர் அறை வெப்பநிலையில் இருந்தால்தான் மாவில் தடவ எளிதாக இருக்கும் 2)மாவை ரொம்ப அழுத்தி விரிக்கக்கூடாது
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு மற்றும் பருப்பு உருண்டை வறுவல் (Paruppu urundau kulambu recipe in tamil)
- நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
- டீ ரஸ்க் (Tea Rusk recipe in tamil)
- பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
- பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruuppu poorana kolukattai recipe in tamil)



























கமெண்ட் (2)