கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)

#coconut
கொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconut
கொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கொண்டைக்கடலை 1 கப் கழுவி ஊற வைக்கவும். வெள்ளை நீர் பூசனி ஒரு பத்தை வாங்கி அதை தோல் நீக்கிவிட்டு 1 இன்ச் அளவுக்கு நறுக்கி வைக்கவும்.
- 2
1/2 கப் துவரம் பருப்பு அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். ஒரு தட்டில் அரைக்கத் தேவையான வற்றை எடுத்து வைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்,1 1/2டீஸ்பூன் தனியா, 1 டீஸ்பூன் கடலை பருப்பு, 1 டீஸ்பூன் சீரகம், 10 மிளகு, 5 வரமிளகாய் எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடலை பருப்பு, தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து விடவும்
- 3
அதனுடன் வரமிளகாய் தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து விடவும்.
- 4
1 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும்.வெந்த துவரம்பருப்பில் வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை நறுக்கிய பூசணிக்காய், அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு குக்கரில் இரண்டு விசில் வேகவிடவும்.
- 5
குக்கரில் விசில் அடங்கியவுடன் திறந்து, ஊறவைத்த புளியை கரைத்து 1/2 கப் புளித்தண்ணீர விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு,1/2 டீஸ்பூன் கடுகு வரமிளகாய் 1 கிள்ளியது சிறிது கறிவேப்பிலை தாளித்து சாம்பார் மேலே சேர்த்து விடவும்.
- 6
சுவையான கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் ரெடி😄😄.
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (4)