கோக்கனட் சாக்லேட் (Coconut chocolate recipe in tamil)

கோக்கனட் சாக்லேட் (Coconut chocolate recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி அதன் பின்னால் இருக்கும் தோலை எடுத்து விடவும்
- 2
பின் பொடியாக நறுக்கி மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
- 3
சூடான கடாயில் பொடித்த தேங்காய் துருவலை சேர்த்து குறைந்த தீயில் வைத்து 10 முதல் 15 நிமிடம் வரை மெதுவாக கலந்து கொண்டே இருக்கவும். ஈரப்பதம் போகும் வரை கலக்கவும்
- 4
Desiccated coconut ரெடி
- 5
சாக்லேட்டை 2 நிமிடம் அவனில் வைத்து உருக்கி எடுக்கவும்
- 6
Desiccated தேங்காய் ஆறியதும் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 7
ஒரு சிறிய தட்டில் சில்வர் பேப்பரை வைத்து அதன் மேல் தேங்காய் கண்டன்ஸ்டு மில்க் உருண்டையை நன்றாக சமன்படுத்தவும்.சமன்படுத்திய தேங்காய் தட்டை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- 8
ஒரு மணி நேரம் கழித்து தேங்காயின் பின்னால் உள்ள சில்வர் பேப்பரை எடுத்து விடவும்
- 9
சிறு துண்டுகளாக நறுக்கவும்
- 10
பின் தேங்காய் துண்டுகளை உருக்கி வைத்த சாக்லேட் கலவையில் முக்கி தனியே எடுத்து வைக்கவும்.
- 11
5 நிமிடத்திற்கு பிறகு சாக்லேட்களை பரிமாறலாம்.கிரிஸ்பியான கோக்கனட் சாக்லேட் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes




























கமெண்ட் (5)