பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)

பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும்.
- 2
வெங்காயம், குடைமிளகாய், பனீரை சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
2 தக்காளி மற்றும் இரண்டு வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கி ஆற வைக்கவும்.
- 4
ஆறியதும் மிக்ஸியில் நன்கு விழுதாக அரைக்கவும்.
- 5
கடாயில் மீதமுள்ள மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 8
பின்னர் பனீர் சேர்த்துக் கொள்ளவும். கிரேவி சற்று வற்றியதும் வறுத்துப் பொடித்த மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- 9
சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்