கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)

கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் கோதுமை மாவு,ரவை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 2
பின்னர் தண்ணீர் ஊற்றி பிசைந்து சப்பாத்தி பதம் உருட்டி கொள்ளவும்.இதனை 15-20 நிமிடம் ஊறவிடவும்
- 3
மாவினை நன்றாக உருட்டி வட்டமாக பரத்தி கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவினை போட்டு எடுத்தால் சுவையான பூரி தயார்
- 5
புளி தண்ணீர் செய்ய:::புளியை தண்ணீரில் 1 மணிநேரம் ஊற வைத்து பிழிந்து கொள்ளவும்.கடாயில் புளி தண்ணீர் ஊற்றி சீரகம் சேர்த்து கிளறவும்
- 6
பின்னர் இதனுடன் மிளகாய்த்தூள், வெல்லம், பெருங்காயம் சேர்த்து கிளறவும்.கெட்டி பதம் வந்ததும் இறக்கவும்.
- 7
பச்சை சட்னி செய்ய::: மிக்ஸியில் மல்லித்தழை,புதினா, பச்சை மிளகாய்,இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து அரைக்கவும்.
- 8
1 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.சுவையான பச்சை சட்னி தயார்
- 9
உருளை மசாலா செய்ய::: உருளைக்கிழங்கு நன்றாக வேக வைக்கவும்
- 10
பின்னர் பாத்திரத்தில் வெங்காயம் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தழை சேர்த்து கிளறவும்.சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்
- 11
சுவையான ஆரோக்கியமான கோதுமை பானி பூரி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்