புதினா சாதம் (Mint rice) (Puthina satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புதினா இலைகளை பிரித்து, சுத்தம் செய்து,சீரகம்,பச்சை மிளகாய்,முந்திரி,உப்பு சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
சாதத்தை உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
- 3
தவாவை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு,வேர்க்கடலை, கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- 4
பின் அரைத்து வைத்துள்ள புதினா விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 5
மசாலா நன்கு வதக்கியவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 6
பின்னர் பரிமாறும் பௌலுக்கு மாற்றி மல்லி இலை தூவி அலங்கரிக்கவும். இப்பொழுது மிகவும் சுவையான, புதினா சாதம் கண்கவர் வண்ணத்தில் சுவைக்கத் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14327288











கமெண்ட் (14)