வெஜிடபிள் சிஸ்லர் (Vegetables Sizzler recipe in tamil)

வெஜிடபிள் சிஸ்லர் (Vegetables Sizzler recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கூக்கரில் பொடியாக நறுக்கிய கேரட்1,பீன்ஸ்5, உருளைக்கிழங்கு 2, பட்டாணி சிறிது அளவு வரமிளகாய் தூள் 1 டீஸ்பூன் உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் 1\4 டம்ளர் சேர்த்து முடி 3 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
- 2
கட்லெட்:
பிறகு வெந்த காய்களை நன்றாக மசித்து வடை போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் கட்லெட் ரெடி. - 3
ஃரைடு ரைஸ்:
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம் சிறிது அளவு,; பச்சை மிளகாயை 2, கேரட் பீன்ஸ், காலிஃப்ளவர் 5 துண்டு பூ, கேரட், பீன்ஸ், குடைமிளகாய்,மிளகாய் சாஸ் 1 டீஸ்பூன் சோயா சாஸ் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.பிறகு அதில் ஒரு கப் வேகவைத்த சாதம் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கவும். - 4
சிஸ்லர் சாஸ்:
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு குடைமிளகாயை நன்கு வதக்கிய பிறகு அதில் சாஸ், கெச்சப், உப்பு, சோழ மாவை தண்ணீரில் கலந்து கடாயில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.சிஸ்லர் சாஸ் ரெடி. - 5
டோஸ்ட்டு வெஜிடபிள்:
ஒரு ஃபேன்(அ) தோசைக்கல்லில் 2 டேபூள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய கேரட், பீன்ஸ்,காலிஃப்ளவர்,கான், குடைமிளகாய் சிறிது அளவு உப்பு சேர்த்து சீரகம் தூள் மிளகு தூள் சேர்த்து நன்கு காய்களை வதக்கி கொள்ளவும். - 6
ஒரு தோசைக்கல்லில் முட்டக்கொஸ் இதழை எண்ணெய் விட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும். பிறகு டோஸ்ட் செய்து முட்டக்கொஸ் ஒரு இதழில் ஃரைடு ரைஸ் அது மீது கட்லெட் மற்றோரு இதழில் டோஸ்ட்டு வெஜிடபிள் சேர்த்து சிஸ்லர் சாஸை இரண்டு முட்டக்கொஸ் மீது நன்கு ஊற்றி சூடாக பரிமாறவும்.
- 7
சுவையான வெஜிடபிள் சிஸ்லர் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
- Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
- மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
- சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)





















கமெண்ட்