Gujarati bindi masala (Gujarati bindi masala recipe in tamil)

#Pongal
பொங்கல் ஸ்பெஷல்...
Gujarati bindi masala (Gujarati bindi masala recipe in tamil)
#Pongal
பொங்கல் ஸ்பெஷல்...
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது எடுத்துக் கொள்ளவும்.ஒரு ஸ்பூன் வரக்கொத்தமல்லி தூள், ஒரு ஸ்பூன் கஷ்மிரி மிளகாய்த் தூள், கால் ஸ்பூன் சீரக தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்புத்தூள் எடுத்துக் கொள்ளவும்.
- 2
புதிய பிஞ்சு வெண்டைக்காயை கழுவி சுத்தம் செய்து ஈரம் போக நன்கு துடைத்து விட்டு அதை இரண்டு இன்ச் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.ஒரு ஸ்பூன் கடலைமாவு, அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் ஸ்பூன் உப்பு மூன்றையும் வெட்டிய வெண்டைக் காயில் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு நான் ஸ்டிக் கடாயில் அல்லது அடி கனமான வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெண்டைக்காயை சேர்த்து வதக்கி, 10 நிமிடம் வரை மூடி வைக்கவும். அவ்வப்போது திறந்து நன்கு கிளறி விடவும்.வெண்டைக்காய் நிறம் மாறாமலும் தீயாமல் இருக்கவும் மிதமான தீயில் செய்யவும். பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
அதே கடாயில் மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஐந்து நிமிடம் வரை மூடி வைக்கவும்.
- 5
வெங்காயம் தக்காளி நன்றாக வெந்தவுடன் கரண்டியால் கொஞ்சம் மசித்து விடவும்.பிறகு அதில் கரம் மசாலா தவிர அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தயிரை அதில் சேர்க்கவும்.தயிர் சேர்க்கும் போது மிதமான தீயில் சேர்க்கவும் தயிர் பிரியாமல் இருக்கும்.
- 6
தயிர் நன்கு கலந்தவுடன் அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். 5 நிமிடம் மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை வைத்திருக்கவும்.
- 7
எண்ணெய் பிரிந்த உடன் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து அரை ஸ்பூன் கரம் மசாலா சேர்க்கவும். நிதானமாக வெண்டைக்காய் உடையாமல் கிளறிவிடவும். பிறகு ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி கையில் கசக்கி வெண்டைக்காய் மசாலாவில் சேர்க்கவும்.கலந்து விட்டு கொள்ளவும்.அடுப்பை அணைக்கவும்.
- 8
சுவையான குஜராத்தி ஸ்டைல் பிந்தி மசாலா தயார். இதை வெறும் சாதம், fried ரைஸ், சப்பாத்தி போன்றவற்றிற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)
#pongal முட்டை புரோட்டா காணும் பொங்கல் ஸ்பெஷல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
பூந்தி ராய்த்தா (Poonthi raita recipe in tamil)
#Grand1கிருஸ்துமஸ் ஸ்பெஷல் மஞ்சூரியன் ஃ பிரைட் ரைஸ் க்கு தொட்டு கொள்ள செய்த பூந்தி ரைத்தா. Meena Ramesh -
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)
மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.type 2 lunch special Meena Ramesh -
Aloo channa paneer masala for poori
வழக்கம்போல் சன்னா பூரிக்கு செய்யாமல், சுண்டலுக்கு ஊறவைத்த சன்னா சிறிது மீதம் இருந்தது அதாவது வெள்ளை கொண்டை கடலை இருந்தது .ஒரு உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. கொஞ்சம் பன்னீரில் இருந்தது. இவை மூன்றும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததால் மூன்றையும் சேர்த்து ஆலு சன்னா பன்னீர் மசாலா பூரிக்கு செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. தமிழ் சென்னா மசாலாவாக இருந்தால் வேகவைத்த கடலையை சிறிது எடுத்து வைத்து மிக்ஸியில் ஒட்டி ஒத்துமைக்கு சேர்த்து செய்வோம். ஆனால் நான் ஒரு உருளைக்கிழங்கை கொண்டைக்கடலை வேக வைக்கும் பொழுதே வேக வைத்து விட்டேன். அதை மசித்து சென்னா கிரேவியில் கலந்து விட்டேன். கொஞ்சமாக இருந்த பன்னீரை தாளிக்கும் கரண்டியில் லேசாக என்னை விட்டு சிவக்க விட்டு அதையும் சன்னா செய்வதில் கலந்து விட்டேன். மூன்றும் சேர்ந்து பூரிக்கு நல்ல ஒரு காம்பினேஷனை கொடுத்தது. Meena Ramesh -
காரட் வீட் மசாலா பரோட்டா (Kara Sweet masala Parotta Recipe in tamil)
#everyday3வழக்கமான கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை செய்வதற்கு பதிலாக கேரட் துருவி சேர்த்து இந்த கோதுமை பரோட்டா செய்தேன்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது போல செய்து கொடுத்தல் வேண்டும். Meena Ramesh -
-
தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
#veஇந்த தட்டை பயிறு குழம்பு சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் சுவையாக இருக்கும். காராமணி பயறு தான் நாங்கள் தட்டைப்பயிறு என்று சொல்வோம். Meena Ramesh -
காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
#கடையில் செய்யும் காலிஃப்ளவர் சிக்ஸ்டி பைவ் திருப்பி திருப்பி சுட்ட எண்ணெயை பயன்படுத்தி வேக வைத்துத் தருவார்கள் ஆனால் நாம் வீட்டில் செய்தால் மிகவும் தரமான பொருட்களை கொண்டு புது எண்ணெயில் சுட்டு தரலாம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்க மிகவும் நன்றாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். Meena Ramesh -
-
Dhaba style mutter masala Recipe in Tamil
#Grand2Happy new year special 😋.... மாறுபட்ட சுவை கொண்ட பட்டாணி குருமா.நாம் எப்போதும் செய்யும் பட்டாணி குருமா வில் இருந்து மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.முந்திரி கொஞ்சம் கூடுதலாக சேர்த்து காரம் குறைத்து செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali -
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
-
வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)
* வெண்டைக்காயை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால் வறண்ட குடலை சரிப்படுத்தும் *ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம்.*இதில் வைட்டமின் சி,பி ஆகிய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது.#I love cooking,eat healthy Foods kavi murali -
குஜராத்தி ஸ்டைல் கொண்டை கடலை மசாலா (Gujarati Style Kondaikadalai Masala recipe in Tamil)
#GA4/Gujarati/Week 4*வெள்ளை கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும்.* இத்தனை சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வைத்து குஜராத்தி ஸ்டைலில் மசாலா செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
-
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
-
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal
More Recipes
- கல்கண்டு சர்க்கரை பொங்கல் (Kalkandu sarkarai pongal recipe in tamil)
- எள் சிக்கி (Ellu chikki recipe in tamil)
- கொண்டை கடலை கறி (Konda kadalai curry recipe in tamil)
- முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
- மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
கமெண்ட்