சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை கழுவி தோல் சீவி விட்டு துருவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
பாலைக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊற வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
ஏலக்காயைப் பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 5
ஒரு பேன் அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பு, திராட்சை இரண்டையும் பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 6
மீதமுள்ள அதே நெய்யில் துருவிய சுரைக்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
சுரைக்காய் நன்றாக வதங்கி தண்ணீர் வற்றி வெந்து வரும் போது அரை லிட்டர் பாலை ஊற்றவும்.
- 8
இதனுடன் வேக வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.
- 9
எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி தேவைக்கு தண்ணீரும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 10
இதனுடன் பொடித்த ஏலக்காயை சேர்த்து மிக்ஸ் பண்ணி 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
- 11
இப்போது 150 கிராம் சீனியை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 12
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.ரொம்பவே சுவையான சுரைக்காய் பாயசம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- கருப்பு சுண்டல் உருண்டை குழம்பு (Black Channa dal Gravy recipe in tamil)
- கறிவேப்பிலை கெட்டி சட்னி (Curry leaves chutney recipe in tamil)

















கமெண்ட்