மேகி பால்ஸ் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேகி வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வேகவைத்த மேகியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு அரைத்த நாயகியை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
- 4
இத்துடன் நாயகி மசாலாவை சேர்த்து 4 செய்து எடுத்துக் கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொள்ளவும்.
- 5
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை லவங்கம் சோம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வெங்காயம் வதங்கிய பின் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
தக்காளி வதங்கிய பின் மஞ்சள் தூள் மல்லி தூள் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிறு சிறு உருண்டைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
2 நிமிடம் வதக்கி அதில் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு புதினா இலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்தால் மேகி பால்ஸ் கிரேவி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்