கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி

#Np1
கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும்
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1
கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் கடல்பாசி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்த வெங்காயம் தக்காளி ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியவுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ளவும். நான் கேரட், பச்சைப் பட்டாணி பீன்ஸ் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைத்து எடுத்துக்கொண்டேன்.
- 3
வெங்காயம் தக்காளி உடன் நறுக்கி வைத்த காய்கறிகள் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு புதினா இழை சேர்த்து வதக்கவும்.
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு துண்டு இஞ்சி பூண்டு காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் புதினா மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
காய்கறிகள் வதங்கியவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின்பு கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
அதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். நான் ஒரு டம்ளர் பாஸ்மதி அரிசியை எடுத்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். மசால் வாடை போனவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
- 7
அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும். அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
- 8
தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு அடுப்பை அணைத்துவிட்டு தம் போடவும்.
- 9
ஒரு தடவையில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் எடுத்து சூடேற்றவும் நான்கு பிரட் எடுத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அதை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 10
நன்றாக சிவக்க பொறித்து எடுத்து பிரியாணியுடன் சேர்த்து கிளறவும்.
- 11
சுவையான கல்யாண வீட்டு பிரிஞ்சி பிரியாணி தயார். தயிர் வெங்காயம் கொத்தமல்லித் துவையல் உருளைக்கிழங்கு வறுவல் செய்து சாப்பிடலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

































கமெண்ட் (2)