குக்கர் காளான் பிரியாணி

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#NP1
விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி

குக்கர் காளான் பிரியாணி

#NP1
விரத நாட்களில், அசைவ பிரியாணிக்கு பதில் அதை சுவையில் இருக்கும் காளான் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2நறுக்கிய வெங்காயம்
  2. 2 தக்காளி
  3. 1 கப் புதினா
  4. 6 பச்சை மிளகாய்
  5. 150 கிராம் காளான்
  6. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 1 இன்ச் பட்டை
  8. 4 கிராம்பு
  9. 1பிரிஞ்சி இலை
  10. 1 மராத்தி மொக்கு
  11. 1 ஏலக்காய்
  12. 1 அன்னாசிப் பூ
  13. சிறிதளவுஜாதிபத்திரி
  14. 1மேசைக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள்
  15. அரை மேஜைக்கரண்டி மஞ்சள்
  16. 1 மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள்
  17. 2 மேஜைக்கரண்டி நெய்
  18. 3 மேஜைக்கரண்டி எண்ணை
  19. உப்பு தேவையான அளவு
  20. 2 கப் பாஸ்மதி அரிசி
  21. 2 மேஜைக்கரண்டி தயிர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் குக்கரில் 2 மேஜைக்கரண்டி நெய் மற்றும் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும், (பாஸ்மதி அரிசியை சமைக்க ஆரம்பிக்கும் போது ஊற வைத்துக் கொள்ள வேண்டும்)

  2. 2

    என்னை நன்கு காய்ந்தபின் மசாலாக்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும், மசாலாக்கள் நன்கு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

  3. 3

    தக்காளி நன்கு வதங்கியதும் காளானை அதனுடன் சேர்த்து வதக்கவும், பின்பு புதினாவை அதனுடன் சேர்த்து வதக்கவும்,பின்பு அதனுடன் காஷ்மீரி மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய் தூள், மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் காளான் நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும், காளானில் மசாலாக்கள் நன்கு ஊறும் வரை வதக்கவும்

  4. 4

    வதக்கிய கலவையுடன் அரிசியை தண்ணீர் நன்கு இழுத்து சேர்த்து, அரிசி உடையாத படி வதக்கிக் கொள்ளவும், ஒரு கப் அரிசிக்கு ஒன்னே முக்கால் அளவு தண்ணீர் ஊற்றவும்.

  5. 5

    பின் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை விட்டு விட்டு, பிறகு மிதமான சூட்டில் அடுப்பில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். சுவையான காளான் பிரியாணி தயார்

  6. 6

    இந்த ருசியான காளான் பிரியாணியை, உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் செய்து கொடுத்து எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட் செய்யவும் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes