வறுத்த கோதுமை மாவு புட்டு
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமையை காயவைத்து வறுத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசறிக் கொள்ளவும்
- 3
மீண்டும் தேவையான அளவு தண்ணீர் தெளித்து மணல் போன்று மாவை பிசைந்து கொள்ளவும் இட்லி சட்டியை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் இந்த மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்
- 4
பிறகு அதை மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும் மாவு வெந்தவுடன் இறக்கி கொள்ளவும்
- 5
அதை சூடு ஆறிய பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றவும் அதில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்
- 6
அதை நன்றாகக் கிளறி எடுத்துக் கொள்ளவும் அதை கையில் எடுக்கும் போது மிருதுவாகவும் சாப்பிட ருசியாகவும் இருக்கும்
- 7
இப்பொழுது வறுத்த கோதுமை மாவு புட்டு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15212715

















கமெண்ட்