"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil

#Magazine1
#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா
#குக்பேட்இந்தியா
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1
#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா
#குக்பேட்இந்தியா
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.அதில் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டிப் போடவும்.தேவையான அளவு உப்பு தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து வேக வைக்கவும்...
- 2
வெந்த உருளைக்கிழங்கை தோல் நீக்கிக் கொள்ளவும்.1டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டீஸ்பூன் சீரகம் தூள்,1டீஸ்பூன் கொத்தமல்லித்தூள்,1டீஸ்பூன் கரம் மசாலா தூள்,1/2டீஸ்பூன் மிளகாய் தூள்,1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவு உப்பு தூள்&கொத்தமல்லித்தழை போட்டு மசித்து பிசைந்துக் கொள்ளவும்.
- 3
250கிராம் கடலை மாவு,125கிராம் அரிசி மாவு,தேவையான அளவு தண்ணீர்&உப்பு தூள்,1/4டீஸ்பூன் பெருங்காயம் தூள் போட்டு கெட்டியான பதத்தில் மாவு-ஐ கரைத்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்கை கொஞ்சமாக எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறிய உருண்டையாக உருட்டி கரைத்த மாவில் ஒவ்வொன்றாக போட்டு நனைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் தேவையான அளவு பாமாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.எண்ணெய் சூடான பிறகு மாவில் நனைத்த உருளைக்கிழங்கு உருண்டையை சூடான எண்ணெயில் போடவும்.
ஒரு பக்கம் வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும்...
- 5
"உருளைக்கிழங்கு(ஆலு)
போண்டா" தயார்.....
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்