பாஸ்மதி வெஜ் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சி, பூண்டு, ஒரு கைப்பிடி அளவு புதினா, தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
அடுத்தது பிரஷர் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் பிரியாணி இலைபோட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும் அடுத்து நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.
- 3
பிறகு அரைத்து வைத்த புதினா தக்காளி விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு பிரியாணி மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை மற்றும் நெய் ஊற்றி குக்கரை மூடி 2 வரும் வரை வேக வைக்கவும்.
- 4
விசில் அடங்கிய பிறகு திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்.
பாஸ்மதி வெஜ்பிரியாணி தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15412712













கமெண்ட் (2)