பருப்பு பாயாசம்(PARUPPU PAYASAM RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொண்டப் பின் குக்கரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கரையும் வரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும், தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு கைப்பிடி அளவு. பின் மீதமுள்ள தேங்காயில் தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு வாணலில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும் பின் முந்திரியை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வாணலில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள வெல்ல கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
- 4
கொதி வந்தவுடன் அதில் தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் அதில் ஏலக்காய்த்தூள் தூவி அடுப்பை ஆஃப் பண்ண வேண்டும்
- 5
நெய்யில் வறுத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் முந்திரியை அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும் சுவையான ஆரோக்கியமான பருப்பு பாயாசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்