தக்காளி வெங்காய குருமா(onion tomato kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3பெரிய வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.2 பெரிய தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, 5 பல் பூண்டு, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல், சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, 4 முழு முந்திரி, 1 1/2 டீஸ்பூன் தனியாத் தூள், 1/2 டீஸ்பூன் சீரகத் தூள் அதனுடன் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- 3
அதனுடன் 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும்.
- 4
நைசாக அரைத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில், 2 டீஸ்பூன் நெய் விட்டு,1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டீஸ்பூன் கடலை பருப்பு சிறிதளவு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 5
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும். வெங்காயம் நன்கு வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 6
பச்சை வாசனை நீங்க நன்கு கொதிக்க விடவும். சுவையான தக்காளி வெங்காய குருமா ரெடி. 😋😋 இட்லி, தோசை சப்பாத்திக்கு ஏற்றது.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்