அகத்திப்பூ பிரியாணி(agathi poo biryani recipe in tamil)

அகத்திப்பூ பிரியாணி(agathi poo biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும் பின்பு பட்டை கிராம்பு சோம்பு பிரியாணி இலை ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
- 2
பின்பு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் 2 பச்சை மிளகாய் கீரி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
- 3
தக்காளியுடன் சிறிது புதினா இலை கொத்தமல்லி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வதங்கியவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 4
பின்பு அகத்திப்பூ சேர்த்து சேர்த்து சிறிது நேரம் வதக்கி இரண்டு டம்ளர் அரிசிக்கு 5 டம்ப்ளர் தண்ணீர் என்ற வீதம் ஊற்றி கொதிக்க விடவும்
- 5
தண்ணீர் கொதித்து அரிசி சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை கிளறி விடவும். மீதம் உள்ள நெய்யை சேர்த்து சிறிது புதினா இலை சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்
- 6
அகத்திப்பூ பிரியாணி ரெடி
Top Search in
Similar Recipes
More Recipes













கமெண்ட் (2)