தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி சுலபமாக ரசம் செய்யலாம் சூப் மாதிரி குடிக்கவும் செய்யலாம். சளி பிரச்சனைகளுக்கு நல்லது.
தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)
தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி சுலபமாக ரசம் செய்யலாம் சூப் மாதிரி குடிக்கவும் செய்யலாம். சளி பிரச்சனைகளுக்கு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கைப்பிடி அளவு தூதுவளை கீரையை அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகு பூண்டு சீரகம் மிளகாய் தூதுவளை இலை இதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த விழுதையும் எண்ணெய்யில் நன்றாக வதக்கி கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி உப்பு மல்லித்தழை போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16176498

கமெண்ட் (2)