கருவாட்டு குழம்பு(dry fish curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருவாட்டு தலையை நீக்கி சுடுதண்ணீரில் இரண்டு நிமிடம் ஊறவிட்டு மூன்று நான்கு முறை கழுவி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்
- 2
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கை காய் சின்ன வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும்
- 3
பின் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் இடித்த பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கை காய் சேர்த்து கூட உப்பு சேர்க்கவும்
- 6
பின் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து மெல்லிய தீயில் பத்து நிமிடம் வரை வேகவிடவும் அவ்வப்போது திறந்து மெதுவாக கிளறி விடவும்
- 7
காய்கறிகள் வெந்ததும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் அலசிய கருவாடு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் மூடி வைத்து கொதிக்க விடவும்
- 9
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு முருங்கை காய் கருவாடு ஆகியவை வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் பச்சை வாசனை போக கொதித்து திக்கானதும் இறக்கவும்
- 10
சுவையான ஆரோக்கியமான கருவாட்டு குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
-
-
-
-
-
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும். SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
#birthday1#clubஇது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துக்கற ரெசிபி உண்மையிலேயே அம்மா தான் ஒரு நல்ல குரு ஆசான் வழிகாட்டி எல்லாம் அவங்க இல்லைனா இது எல்லாம் கத்துக்க முடியாது இத சொல்லி கொடுக்கும் போது கூட இந்த பக்குவம் அளவு எல்லாம் எங்க தலைமுறையோடு போயிற கூடாது இப்போ தான் பாக்கெட் பாக்கெட் ஆ வாங்கறாங்க அப்போ எல்லாம் வீட்டுக்கு வீடு அரைப்பாங்க னு சொல்லி கத்துக் கொடுத்தாங்க அம்மாகிட்ட இருந்து அவங்க கை மணம் மாறாம கத்துகிட்ட செய்முறை Sudharani // OS KITCHEN -
-
-
-
-
More Recipes
கமெண்ட்