தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி சுலபமாக ரசம் செய்யலாம் சூப் மாதிரி குடிக்கவும் செய்யலாம். சளி பிரச்சனைகளுக்கு நல்லது.

தூதுவளை ரசம் /சூப்(thoothuvalai rasam recipe in tamil)

தூதுவளைக் கீரையைப் பயன்படுத்தி சுலபமாக ரசம் செய்யலாம் சூப் மாதிரி குடிக்கவும் செய்யலாம். சளி பிரச்சனைகளுக்கு நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1கைப்பிடி அளவு தூதுவளைக் கீரை
  2. 10 எண்ணிக்கை சின்ன வெங்காயம்
  3. 6பல் பூண்டு
  4. 1டீஸ்பூன் சீரகம்
  5. 1டீஸ்பூன் மிளகு
  6. 1பழுத்த தக்காளி
  7. நெல்லிக்காய் அளவுபுளி
  8. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 2கொத்து கறிவேப்பிலை
  10. 1/2டீஸ்பூன் கடுகு
  11. 3காய்ந்த மிளகாய்
  12. தேவையானஅளவு உப்பு
  13. தாளிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    ஒரு கைப்பிடி அளவு தூதுவளை கீரையை அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகு பூண்டு சீரகம் மிளகாய் தூதுவளை இலை இதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த விழுதையும் எண்ணெய்யில் நன்றாக வதக்கி கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி உப்பு மல்லித்தழை போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rithu Home
Rithu Home @rithuhomemohana
அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
ரசத்தில் வெங்காயம் சேர்க்காமல் செய்தேன்

Similar Recipes