வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)

வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானதை சுத்தம் பண்ணி கட் பண்ணிக் கொள்ளவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொஞ்சம் வெங்காயம்,பூண்டு,இஞ்சி காய்களை லேசாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பின் மிளகாய்பொடி,கரம்மசாலாப்பொடி,காஷ்மீர்சில்லி எடுத்துக் கொள்ளவும்.
- 4
அதே வாணலியில் ஒருஸ்பூன் வெண்ணெய்போட்டு பட்டை,சோம்பு தாளித்து வெங்காயம் போடவும்,பின் மஞ்சள் பொடி சேர்க்கவும்.
- 5
பின் காஷ்மீர் மிளகாய்பொடி,கரம்மசாலா பொடி,சேர்க்கவும்.
- 6
மிளகாய் பொடி சேர்க்கவும்.தக்காளி ப்யூரி சேர்க்கவும்.
- 7
பின் தட்டில் எடுத்து வைத்த காய்கறிகளைச் சேர்க்கவும்.
- 8
நன்கு பிரட்டி விடவும்.உப்பு சேர்க்கவும்.தக்காளி தான் கிரேவி தன்மை கொடுக்கும்.கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிரட்டி, பிரட்டிவிடவும்.
- 9
ரொம்ப குழைய வேகவிடவேண்டாம்.காய்கறிகள்,தக்காளிப்யூரி சேர்ந்தால் போல் வந்ததும் மல்லிதழை மேலே போட்டு அலங்கரிக்கவும்.வெஜ் கடாய் கிரேவி ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes






























கமெண்ட்