பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம்(butter scotch ice cream recipe in tamil)

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம்(butter scotch ice cream recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கலக்கவும். உருகி பிறகு தேன் கலர் ஆனதும் இதில் சிறிதளவு நறுக்கிய முந்திரி சேர்த்து கலக்கவும். தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி ஆறவிடவும். ஆறின பிறகு மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கஸ்டர்டு பவுடரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கலந்து கொதிக்க விடவும். பிறகு இதை ஆற வைக்கவும்.
- 2
அடுத்த குளிர்ந்த பாத்திரத்தில் குளிர்ந்த ஃப்ரஷ் க்ரீம் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் நன்றாக அடிக்கவும். அடுத்தது சர்க்கரை பவுடர், செய்து வைத்த கஸ்டர்டு, கேரமல் பவுடர், பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
அடுத்த சின்ன பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் ப்ரிஸர்'ல் வைக்கவும்.
- 4
பரிமாறும் முன் 5 நிமிடம் வெளியில் வைத்து பரிமாறவும்.
- 5
அருமையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட் (7)