மீல்மேக்கர் பெப்பர் ஃப்ரை(mealmaker pepper fry recipe in tamil)
மீல்மேக்கர் பெப்பர் ஃப்ரை(mealmaker pepper fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீல்மேக்கரை சுடு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் நன்றாக தண்ணீரை பிழிந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இதில் காய்ந்த மிளகாய் மற்றும் தோலுடன் கூடிய பூண்டு இதனை தட்டி சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- 3
பின் மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்க்கவும் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி வதங்கி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 4
பிறகு கெட்டியான தேங்காய்ப் பாலை ஊற்றி கலந்துவிட்டு மீல்மேக்கரை இதில் கலந்து தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.
- 5
இதனை நன்றாக கலந்து மிளகுத்தூள் கடைசியாக சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நீர் ஊற்றி கிளறி அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்