ஆப்பம் தேங்காய்ப்பால்(appam with coconut milk recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
ஆப்பம் தேங்காய்ப்பால்(appam with coconut milk recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம், 3மணி நேரம் ஊற வைத்து தேங்காய் துருவல் சேர்த்து ஆட்டவும். முக்கால் பதம் அரைந்ததும் சாதம் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8மணி புளிக்க வைக்கவும்.
- 2
ஆப்பம் சுடும் பொழுது 1சிட்டிகை சமையல் சோடா கலந்து ஆப்பச் சட்டியில் மாவை ஊற்றி சுழற்றி லேசாக எண்ணெய் விட்டு மூடி சிம்மில் வைத்து வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து வைக்கவும்.
- 3
தேங்காய்த்துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கெட்டியாக பால் எடுத்து வைக்கவும். இதில் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.ஆப்பத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16350176








கமெண்ட் (3)