சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி தண்ணீரை வடிகட்டி குக்கரில் போடவும்
- 2
பின் காய்ச்சிய பால் மற்றும் தண்ணீர் சேர்த்து (2 கப் அரிசி 1_1/2 கப் பருப்பு மொத்தம் 3_1/2 கப் 1 கப்பிற்கு 4 கப் தண்ணீர் வீதம்) 2 ஸ்பூன் நெய் விட்டு குக்கரை மூடி 4 விசில் 5 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து இறக்கவும்
- 3
ப்ரஷர் அடங்கியதும் திறந்து உப்பு சேர்த்து நன்கு மசித்து விடவும் (கரண்டியால் கிளறினாலே மசிந்து விடும்) சாதம் சூடாக இருக்கும் போதே 150 மில்லி நெய் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிய விடவும் பின் மிளகு சேர்த்து படபடவென வெடிக்கும் வரை மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும் மிளகு வெடித்தால் நன்கு மணம் வரும்
- 5
பின் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 6
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கருகவிடாமல் வறுக்கவும்
- 7
பின் ரெடியாக உள்ள பொங்கலில் கொட்டவும்
- 8
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை நன்றாக கலந்து விடவும் பின் மீதமுள்ள நெய்யை மேலே ஊற்றி கிளற வேண்டாம் தளதளன்னு இருக்கும் போது அப்படியே இறக்கவும் மிகவும் இறுகவிட வேண்டாம் ஆறியதும் கல் மாதிரி ஆகி விடும் பால் சேர்த்து செய்திருப்பதால் மிகவும் நன்றாக இருக்கும்
- 9
சுவையான ஆரோக்கியமான மணமான வெண் பொங்கல் ரெடி
Similar Recipes
-
-
-
-
-
-
-
சீரக சம்பா பச்சரிசி குருணை வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
ஊர்ல எங்க அண்ணி வீட்டுக்கு பக்கதுல, விவசாயிங்க சீரக சம்பா குருணை வழக்கத்த விட கொஞ்சம் குறைஞ்ச விலைக்கு கொடுப்பாங்க... நம்ம, அத வச்சு வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், தேங்காய் பால் சாதம், புலாவ் மாதிரி நிறைய செய்யலாம்.. சுவை அபாரமா இருக்கும்.. இன்னைக்கு நான் மண்சட்டில எப்படி பண்றதுன்னு காட்டுறேன்... நீங்க குக்கர்லயும் செஞ்சுக்கலாம்.. Tamilmozhiyaal -
வெண்பொங்கல் /VenPongal
#கோல்டன் அப்ரோன் 3#lockdown1கொரோனா வைரஸ் ,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வெண்பொங்கல் செய்ய முடிவு செய்தேன் .பச்சரிசி பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இன்று ஸ்ரீராம நவமி, கோவிலுக்கும் செல்ல முடியாது .இந்த சூழலில் வீட்டிலேயே ஸ்ரீராமருக்கு பிடித்த வெண்பொங்கல் நைவேத்தியத்தை செய்து சுவாமிக்கு படைத்தேன். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்