பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)

பாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

சமையல் குறிப்புகள்
- 1
பாலக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பாலக்கீரை வணக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
கசகசா மற்றும் முந்திரி பருப்புகளை சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்
- 4
பாலக் கீரையை அரைத்துக் கொள்ளவும். கசகசாவையும் மற்றும் முந்திரியையும் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் வெண்ணை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள பால கீரை கலவையை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் கொத்தமல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
இப்பொழுது அரைத்து வைத்துள்ள முந்திரி கசகசா கலவையை சேர்க்கவும்.
- 8
வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும்.
- 9
பன்னீர் துண்டுகளை நன்கு கலந்து விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால், அருமையான சுவையான பாலக் பன்னீர் தயார். சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் 😋😋😋
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)