அடை ஒரு புதுவிதம்(adai recipe in tamil)

அடை பல தானியங்கள் கலந்தது. புளிக்க வைக்கவில்லை. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கறிவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி, வெள்ளறி சேர்த்து செய்தேன். கூடை கூடையாய் தக்காளி தோட்டத்தில், புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது. மேலே முளை கட்டிய பயறு தூவினேன் #renuga saravanan

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 3
நீரில் அரிசி, பருப்புகள், வெந்தயம் 4-6 மணி நேரமாவது ஊறவைக்கவும். வடித்து கூட இஞ்சி, மிளகாய், பூண்டு, தக்காளி, கேரட் 1 கப் வெங்காயம்,. நீர் சேர்த்து கிரைண்டரில் போட்டு கொற கொறவென்று அறைக்கவும்.
மாவு சிறிது கெட்டியாக இருக்கவேண்டும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும். 1 மணி நேரம் ரெஸ்ட் செய்க
அடை செய்யும் முன் மீதி வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம். வெள்ளரி துருவல், பெருங்காயம், சேர்த்து நன்றாக கிளறி கலக்கவும், - 4
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் cast iron ஸ்கிலேட்தான் உபயோகிப்பேன். சூடான பின், கல்லின் மேல் எண்ணை தடவி எப்பொழுதும் அடை செய்வது போல 1 ½ கப் மாவில் ஒரு அடை செய்க. அடை மெல்லியதாக இருக்கவேண்டியதில்லை மேலே 2 தேக்கரண்டி நல்லெண்ணை பரவலாக ஊற்றுக. மூடி வேகவைக்க. 2 நிமிடம். திருப்பும் முன் மேலே 2 மேஜை கரண்டி முளை கட்டிய பயறு தூவுக.சில அடைகள் மேல் முதலில் தக்காளி சட்னி தடவி மேலே முளை கட்டிய பயறு தூவினேன், மெல்ல அழுத்துக
- 5
பின் திருப்பி போடுக இரண்டு பக்கமும் வேகவைக்க. 3-4 நிமிடங்களில் சத்தான சுவையான ஒரு அடை தயார்.
பரீம்மாறும் தட்டிர்க்கு மாற்றுக. எப்பொழுதும் சுவைத்துப்பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம்.அவியல் சாம்பாரோடோ அல்லது விருப்பமான சட்னியோடோ, ஊறுகாயோடோ, மிளகாய் பொடியோடோ, அல்லது துவையலடோ பரிமாறுக.
ரேணுகா அவியல் செய்வார்கள் அடையுடன் சாப்பிட.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (6)