சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)

#TheChefStory #ATW2 மிக அதிக அளவு சத்துள்ள சிகப்பு அரிசியை பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்
சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)
#TheChefStory #ATW2 மிக அதிக அளவு சத்துள்ள சிகப்பு அரிசியை பொங்கல் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்
சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பு அரிசியை அகலமான பாத்திரத்தில் அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 8 முதல் 10 மணி நேரங்கள் ஊற வைக்கவும்
- 2
பிறகு அதனை குக்கரில் சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி 8 விசில் விடவும். இப்போது நன்கு மசிய வெந்திருக்கும்.
- 3
அடி கனமான கடாயில் 1/4cup நெய் சேர்த்து காய்ந்ததும் அதனுள் வேகவைத்த சிகப்பு அரிசியை சேர்க்கவும்
- 4
மற்றொரு அடுப்பில் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் 2 கப் அளவு வெல்லத்தை தூள் செய்து அதனுள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் (அதாவது வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்)
- 5
பிறகு இதனை வடிகட்டி வேகவைத்த அரிசினுடன் ஊற்றவும். இப்போது அடுப்பை அதிக தணலில் வைத்து நன்கு ஒரு சேர கொதி வர விட்டு பிறகு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்
- 6
மற்றொரு சிறு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை மிதமான தீயிலேயே சிவக்க பொரிக்கவும். இதனை பொங்கலுடன் சேர்க்கவும்
- 7
நன்கு கலந்து விட்டு மீண்டும் மிதமான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட்