மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3
கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3
கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
மண் சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
காளானை சுத்தம் செய்து கழுவி நறுக்கி சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 3
இப்பொழுது காளானில் இருந்து தண்ணீர் விடும். சுண்டும் வரை வதக்கிக் கொள்ளவும். அதன் பின் தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதன் பிறகு தேங்காய் மிளகு சீரகம் சோம்பு பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து குழம்பில் ஊற்றவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சரிபார்த்து குழம்பு தள தள வென்று கொதிக்கும் நேரத்தில் கொத்தமல்லி இலைகள் தூவி அடுப்பை அணைக்கவும்.
- 5
தாய்ப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, கல்பாசி பட்டை கிராம்பு, ஏலக்காய் மராட்டி மொக்கு கருவேப்பிலை நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றி கிளறவும்.
- 6
மூடி போட்டு பத்து நிமிடங்கள் விட்டு அதன் பின் பரிமாறவும் புலாவ்,நான்,பரோட்டா, சப்பாத்தி ஆகியவுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
- முட்டை தொக்கு(egg gravy recipe in tamil)
- செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)
- Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
- இத்தாலியன் வெள்ளரி, ஆலிவ் சாலட் (Italian cucumber, olive salad recipe in tamil)
















கமெண்ட்