சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)

சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 3 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு, நட்சத்திர பூ, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு நீளமாக இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விடவும்
- 2
இப்போது பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பொடியாக அறிந்த கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து மிதமான தீயிலேயே 2 நிமிடம் வதக்கவும்
- 3
இப்போது இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு பிறகு மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 4
மசாலாக்களின் பச்சை வாடை போக மிதமான தீயிலேயே 2 நிமிடம் நன்கு வதக்கி விடவும். இப்போது பொடியாக அரிந்த தக்காளியை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி விடவும்.
- 5
ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து காய்கறி வேகும் அளவிற்கு உப்பு சேர்த்து தட்டு கொண்டு மூடி 10 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக விடவும்
- 6
இப்போது திறந்து பார்க்கும் பொழுது காய் நன்கு வெந்து இருக்கும். இப்போது அரை கப் அளவு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் 1tspசோம்பு, 1tblspn பொட்டுக்கடலை, 6 to 8முந்திரி பருப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து காயுடன் சேர்க்கவும்.
- 7
இப்போது தேங்காய் விழுதுடன் மீண்டும் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைத்து, கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும். 5 நிமிடத்திற்குப் பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
- முட்டை தொக்கு(egg gravy recipe in tamil)
- செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)
- Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
- இத்தாலியன் வெள்ளரி, ஆலிவ் சாலட் (Italian cucumber, olive salad recipe in tamil)
























கமெண்ட் (2)