நாகர்கோவில் ஸ்பெஷல் பருப்பு போலி(paruppu poli recipe in tamil)

RIZWANA @RIZFIZ
நாகர்கோவில் ஸ்பெஷல் பருப்பு போலி(paruppu poli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு உப்பு மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து கொல கொலவென பிசைந்து கொள்ளவும் பின் மாவு மூழ்கும் வரை நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடவும்
- 2
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற விடவும்
- 3
கடலைப்பருப்பு உரிய பின் ஏழு விசில் வரும் வரை நன்கு வேக விடவும்
- 4
வேக வைத்த கடலைப்பருப்பு நன்கு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்து கடலைப்பருப்பு சர்க்கரை ஏலக்காய் தூள் அனைத்தையும் சேர்த்து கடலை பருப்பில் உள்ள ஈரப்பதம் போகும் வரை கிளற வேண்டும்
- 6
பின் ஆற வைத்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்
- 7
மைதா மாவு விரித்து அதில் உருண்டை பிடித்து வைத்துள்ள கடலைப்பருப்பையும் சேர்த்து அரிசி மாவில் தட்டி தேய்த்து சுட்டு எடுக்கவும்
- 8
தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் நெய் சேர்த்து சுட்டெடுக்கும் இப்போது போலி பரிமாற தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16552495


















கமெண்ட்