கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe in tamil)
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றவும் நன்றாக காய்ந்த பின் பிரியாணி இலை அன்னாசி பூ பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசி சேர்த்து தாளிக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 2
பாசிப்பருப்பை லேசாக வறுத்து தண்ணீர் விட்டு குக்கரில் சேர்க்கவும் இதில் மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு கழுவி இரண்டாக வெட்டி சேர்த்து மூடி போட்டு நான்கு விசில் வேகவிட்டு எடுக்கவும். வெந்த பாசிப்பருப்பை கடாயில் சேர்த்து கூடவே உருளைக்கிழங்கு தோல் உரித்து மசித்து சேர்க்கவும்.
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு கசகசா சோம்பு சேர்த்து நைசாக அரைத்து வட சட்டியில் ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதி வந்தபின் அடுப்பை அணைக்கவும். இட்லி தோசை பூரி சப்பாத்தி இவற்றோடு கும்பகோணம் கடப்பா பொருத்தமாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட்