பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்

#மதிய உணவுகள்
எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்
எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு
சமையல் குறிப்புகள்
- 1
பாலக்கீரை நன்றாக கழுவி தண்ணீர் வற்றியவுடன், ஒரு பாத்திரத்தில் 1/4 கிளாஸ் தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, பச்சைமிளகாய், பூண்டு- 3, சின்ன வெங்காயம், உப்பு தேவையான அளவு சேர்த்து வேகவைக்கவும்
- 2
பத்து முதல் பதினைந்து நிமிடம் பாலக்கீரை வெந்த்தவுடன், சுடாறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 3
இனி கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், தக்காளி, வெங்காயம், சேர்த்து வாட்டவும்
- 4
1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, கொத்துமல்லி பொடி, 1/4 டீஸ்பூன் கரம் மசாலா பொடி சேர்த்து வாட்டவும்
- 5
பின்னர் அதில் அரைத்து வைத்த பாலக்கீரை சேர்க்கவும், ஐந்து நிமிடம் வைத்து பின்னர் இறக்கியவுடன் கீரிம் சேர்க்கவும்
- 6
இனி சேனைக்கிழங்கு, தண்ணீர், 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 7
வேகவைத்த சேனைக்கிழங்கு இனி தாழித்து எடுக்க இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சிறிதாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பில்லை, இஞ்சிபூண்டு விழுது, பட்டை கிராம்பு, வற்றல் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 8
இதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி தேவையான அளவு உப்பு சேர்க்கவும், பின்னர் வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து நன்றாக சிறிய தீயில் வைத்து வறுவல் போல ஆகும் வரை வைத்து எடுக்கவும்
- 9
சுடான சாப்பாடு உடன் பாலக்கீரை மசியல் மற்றும் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல் சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes










கமெண்ட்