வெண்டைக்காய் சாம்பார் (ladies finger sambar recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் துவரம் பருப்பை சேர்த்த நன்றாக குழைய வேக வைத்துக் கொள்ளவும்.. வேக வைத்த பருப்புடன் தக்காளி, மஞ்சள் தூள், புளி கரைசல் சேர்த்து கலந்து விடவும்...
- 2
அடுப்பில் வைத்து கொதி வரும்போது பருப்புடன் உப்பும் சாம்பார் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்..
- 3
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் வெங்காயம் வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.. குழம்பில் புளி கரைசலின் பச்சை வாசனை போன பிறகு அதனுடன் நாம் வதக்கி வைத்த வெண்டைக்காயும் சேர்த்து வேக விடவும்..
- 4
வெண்டைக்காய் நாம் ஏற்கனவே வதக்கும்போதே நன்றாக வெந்திருக்கும் குழம்பில் சேர்த்து அதிக நேரம் வேக வைக்க தேவையில்லை அப்படி அதிக நேரம் வேக வைத்தால் குழம்பு வழு வழு என்று இருக்கும்.. இறுதியாக சிறிதளவு துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதித்தால் போதுமானது..
- 5
அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலையை தூவி கலந்து விடவும் ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்..
- 6
இப்போது சூடான சுவையான அருமையான வெண்டைக்காய் சாம்பார் தயார்..
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட் (6)