சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கடலை மாவு, ஓமம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கையால் நன்கு கலந்து கொள்ளவும்... ஓமத்தை கையால் கசக்கி சேர்த்துக் கொள்ளவும் அப்பொழுதுதான் மணம் அருமையாக இருக்கும். பிறகு சூடான எண்ணெயை அதில் சேர்த்து ஒரு ஸ்பூனால் முதலில் விரவி விட்டு பிறகு நன்றாக கையால் கலந்து கொள்ளவும்..
- 2
- 3
கலந்த மாவை கையில் பிடித்தால் பிடிக்க வர வேண்டும் உதிர்த்து விட்டால் உதிர்ந்து விட வேண்டும் அதுதான் சரியான பதம்.. அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..
- 4
என்னிடம் டெசிகேட்டட் கோகனட் இல்லை அதனால் நான் தேங்காயை நிறம் மாறாமல் வறுத்து எடுத்துள்ளேன்.. இந்த ரெசிபிக்கு டெசிகேட்டட் கோகனட் சேர்ப்பார்கள் என்னிடம் இல்லாததால் நான் இந்த முறையில் செய்தேன்..
- 5
ஒரு கடாயில் வறுக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நிறம் மாறும் அளவு வறுத்து எடுத்துக் கொள்ளவும்... அடுப்பை அணைத்துடன் சூடாக இருக்கும் போதே மிளகாய் தூள் மஞ்சள் தூள் சுக்குத்தூள் சேர்த்து கலந்து விடவும்..
- 6
இறுதியாக சிறிது உப்பும் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்த பிறகு அதில் சர்க்கரையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்..
- 7
இப்போது புளி சட்னி செய்ய ஒரு பாத்திரத்தில் புளி குறைந்த தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும் அது கொதித்து கெட்டியானதும் நன்றாக புளியும் வெந்திருக்கும் வெல்லமும் கரைந்திருக்கும் அதன் பிறகு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்..
- 8
வடிகட்டிய புளிக்கரைசலுடன் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா உப்பு சேர்த்து கலந்தால் புளி சட்னி தயார்.. இந்த சட்னியை சாட் ஐட்டம்ஸ் எல்லாவற்றிற்கும் நீங்கள் பயன்படுத்தலாம்.. பேல்பூரி பானி பூரி இப்படி எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம்...
- 9
- 10
இப்போது பிசைந்த மாவை எடுத்து நன்றாக நீளவாக்கில் தேய்த்து அதை ஓரங்களில் சரிசமமாக கட் செய்து கொள்ளவும்..
- 11
அந்த மாவின் மீது புளி சட்னியை வைத்து நன்றாக தேய்த்துக் கொள்ளவும் ஓரங்களில் தேய்க்க கூடாது நடுவில் மட்டும் தேய்த்து விட்டு நாம் செய்த பொடியையும் அதன் மேல் தூவி நன்றாக கையால் அமுக்கி பொடியை புளி சட்னியில் ஒட்ட வைக்கவும்.. அப்பொழுதுதான் எண்ணையில் போடும் போது பிரிந்து வராமல் இருக்கும்..
- 12
மாவின் ஒரு பகுதியை நன்றாக விரல்களால் அமுக்கி விட்டு அந்த இடத்தில் நன்றாக தண்ணீர் தடவி வைக்கவும் நாம் சுருட்டிக்கொண்டு கடைசியாக வரும்போது அந்த இடம் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.. படத்தில் காட்டியவாறு நன்றாக அதை சுருட்டிக் கொள்ளவும்..
- 13
சுருட்டியதை அரை இன்ச் அகலத்தில் வெட்டி அதை விரலால் நன்றாக அமுக்கி தட்டையாக்கி கொள்ளவும்..
- 14
எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும் அந்த எண்ணெயில் நாம் செய்து வைத்துள்ள பாகர்வாடியை போட்டு சலசலப்பு அடங்கும் வரை பொரித்தெடுக்கவும்..
- 15
இப்போது சூடான சுவையான இனிப்பான புளிப்பான காரசாரமான பாகர்வாடி தயார்..
Similar Recipes
More Recipes














































கமெண்ட் (10)