சமையல் குறிப்புகள்
- 1
வரகரிசி சாதம் செய்முறை கீழே லிங்கில் கொடுத்துள்ளேன் அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்... முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயத்தாள், கார்ன் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் அதனுடன் நாம் வேகவைத்துள்ள வரகு அரிசி சாதத்தையும் சேர்க்கவும்
- 2
எல்லாம் ஒன்றாக வதங்கியதும் அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
எல்லாம் ஒன்றாக கலந்ததும் இறுதியாக அதனுடன் வெங்காயத்தாள் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்..
- 4
இதில் எல்லா காய்கறிகளும் நாம் சேர்த்துள்ளோம்.. சத்தான அரிசியும் கூட குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.. இப்போது சூடான சுவையான 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வரகரிசி பிரைடு ரைஸ் தயார்..
- 5
வரகு அரிசி சாதம்
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16810380
















கமெண்ட் (6)