குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#goldenapron2
குஜராத்தில் பிரபலமான மாலை நேர ஸ்னாக் இது. டீயுடன் சாப்பிடுவார்கள். வெந்தயகீரை சேர்த்து செய்த மசாலா காக்ரா

குஜராத்தி மசாலா காக்ரா (Gahra Recipe in Tamil)

#goldenapron2
குஜராத்தில் பிரபலமான மாலை நேர ஸ்னாக் இது. டீயுடன் சாப்பிடுவார்கள். வெந்தயகீரை சேர்த்து செய்த மசாலா காக்ரா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் கம்பு மாவு
  2. 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு
  3. 1கட்டு வெந்தயகீரை
  4. தேவையான அளவு உப்பு
  5. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  7. 1டீஸ்பூன் மிளகாய் பொடி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெந்தயகீரையை ஆய்ந்து அலசி எடுத்து கொள்ளவும்

  2. 2

    கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    அதில் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  5. 5

    பின் முடிந்தவரை லேசான காக்ராவாக தேய்த்து கொள்ளவும்

  6. 6

    தவா காய்ந்ததும் சிம்மில் வைத்து காக்ராவை அதில் போட்டு ஒரு துணியால் லேசாக அழுத்தி கொடுத்தபடி அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக இரண்டு பக்கமும் வேக விடவும். சப்பாத்தி போல எண்ணெய் விட கூடாது.

  7. 7

    இதே போல அனைத்தையும் செய்து கொள்ளவும். இது ஆறியதும் கிரிஸ்பி ஆக ஆகிவிடும்.

  8. 8

    காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து கொண்டு பதினைந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes