ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

ரவை பைனாப்பிள் கேசரி (Ravai pine apple kesari)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப்ரவை
  2. 1.5 கப்சர்க்கரை
  3. 1/2 கப்நெய்
  4. 2.5 கப்தண்ணீர்
  5. 1/2 கப்புதிய அன்னாசி பழ துண்டுகள்
  6. 10முந்திரி திராட்சை- தலா
  7. தேவையான அளவுஎல்லோ ஃபுட் கலர்
  8. 1 tspபைனாப்பிள் எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்துக் எடுத்து கொள்ளவும். பின்பு அதில் இன்னும் சிறிது நெய் சேர்த்து ரவையை மிதமான சூட்டில் வறுத்துக் எடுத்து கொள்ளவும்.பின்பு நறுக்கிய அன்னாசி பழத் துண்டுகளை சேர்த்து அதனுடன் சிறிது எண்ணெய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அன்னாசி பழம் நன்றாக வதங்கியதும் அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். அதில் எல்லோ ஃபுட் கலர் மற்றும் பைனாப்பிள் எசன்ஸ் சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும்.

  3. 3

    ரவை நன்றாக வெந்து கெட்டியானதும் அதில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கலக்கவும்.சர்க்கரை கரைந்து மீண்டும் இறுகும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். இடையிடையே நெய் சேர்த்து கிளறவும்.கெட்டியானவுடன் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கிளறி விடவும்.

  4. 4

    அவ்வளவுதான் சுவையான பைனாப்பிள் கேசரி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
அன்று

Similar Recipes