சைனீஸ் ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ்...! (Chinese Style Chicken Fried Rice)

Fma Ash
Fma Ash @cook_20061862

காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். பல வகையான பிரைட் ரைஸ் உள்ளது. நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். மீதமிருந்த பழைய சாதத்தில் பிரைட் ரைஸ் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.

#flavor
#goldenapron3

சைனீஸ் ஸ்டைல் சிக்கன் பிரைட் ரைஸ்...! (Chinese Style Chicken Fried Rice)

காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கூட விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும். பல வகையான பிரைட் ரைஸ் உள்ளது. நீங்கள் விரும்பிய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். மீதமிருந்த பழைய சாதத்தில் பிரைட் ரைஸ் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.

#flavor
#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
05 நபர்கள்
  1. சிக்கனை மேரினேட் செய்ய தேவையான பொருட்கள்:
  2. 300 கிராம் சிக்கன்
  3. 2டீஸ்பூன் சோளமா
  4. 2டீஸ்பூன் சோயா சாஸ்
  5. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா [அப்பச் சோடா]
  6. 2டீஸ்பூன் சர்க்கரை
  7. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 2டீஸ்பூன் எண்ணெய் [சிக்கனை வதக்க தேவையானளவு]
  9. முட்டையை வதக்க தேவையான பொருட்கள்:
  10. 5 முட்டைகள்
  11. 3 ஸ்பூன் எண்ணெய் [முட்டையை வதக்க தேவையானளவு ]
  12. 1டீஸ்பூன் உப்பு
  13. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  14. பிரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
  15. 6 கப் சாதம் [ 85% அவித்தது ]
  16. 5 ஸ்பூன் எண்ணெய் [பிரைட் ரைஸ் செய்ய தேவையானளவு ]
  17. 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  18. 1 ஸ்பூன் அரைத்த இஞ்சி
  19. 1 நறுக்கிய வெங்காயம் [பெரியது]
  20. 5 நறுக்கிய பீன்ஸ் [போஞ்சி]
  21. 3 நறுக்கிய கரட்
  22. ½ கப் பச்சை பட்டாணி [கிரீன் பீஸ்]
  23. 3 ஸ்பூன் டார்க் சோயா சாஸ்
  24. தேவையானளவு உப்பு
  25. தேவையானளவு மிளகுத்தூள்
  26. (ஸ்பூன் = மேசைக்கரண்டி)
  27. (டீஸ்பூன் = தேக்கரண்டி)
  28. (1 கப் = 128 கிராம்)

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலாலது படி
    சிக்கனை வதக்கல்.

    * சிக்கனை ஒரே அளவான துண்டுகளாக சதுர வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    * சோளமா, சோயா சாஸ், பேக்கிங் சோடா, சர்க்கரை, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.

    * மேரினேட் செய்த சிக்கனை 10 நிமிடங்கள் வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மேரினேட் செய்த சிக்கனை பொன் நிறமாகும் வரை வதக்கவும்.

    * பின்னர் வதக்கிய சிக்கனை வேறாக எடுத்து வைக்கவும்.

  3. 3

    இரண்டாவது படி
    முட்டையை வதக்கல்.

    * அதே கடாயில் எண்ணெய் விட்டு, முட்டைகளை நன்றாக அடித்து ஊற்றவும்.

    * பின்பு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

  4. 4

    முட்டை உதிரி, உதிரியாக வரும் வரை வதக்கவும்.

    * பின்னர் வதக்கிய முட்டைகளை வேறாக எடுத்து வைக்கவும்.

  5. 5

    மூன்றாவது படி
    பிரைட் ரைஸ் தயாரித்தல்.

    * அதே கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பூண்டு, அரைத்த இஞ்சி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய கரட், பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

  6. 6

    90% காய்கறிகள் வெந்ததும், வதக்கி வைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

    * பின்னர் 85% அவித்த சாதத்தை சேர்க்கவும்.

  7. 7

    டார்க் சோயா சாஸ்,
    தேவையானளவு உப்பு,
    தேவையானளவு மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

  8. 8

    இறுதியாக வதக்கி வைத்த முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.

    * அவ்வளவுதான் சூப்பரான சைனீஸ் ஸ்டைல் பிரைட் ரைஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes