சமோசா (samosa recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

சமோசா (samosa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250கிராம் மைதா
  2. 1ஸ்பூன் ஓமம்
  3. 50மி நெய்
  4. 1ஸ்பூன் சோம்பு
  5. 2ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  6. 1நறுக்கிய வெங்காயம்
  7. 3வேகவைத்த உருளைக்கிழங்கு
  8. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. சிறிதளவு கொத்தமல்லி
  11. தேவையான அளவு உப்பு
  12. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, ஓமம், நெய் சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளிக்கவும்

  3. 3

    பூண்டு சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  5. 5

    அத்துடன் மசித்த கிழங்கு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.. மசாலா தயார்

  6. 6

    பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து வட்டமாக தேய்த்து கொள்ளவும்.. இரண்டாக வெட்டவும்

  7. 7

    ஒரு பாதியை எடுத்து கோன் மாதிரி சுற்றி நடுவில் மசாலாவை வைத்து ஓரத்தில் தண்ணீர் தடவி ஒட்டி கொள்ளவும்

  8. 8

    கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் சமோசாவை பொரித்தெடுக்கவும்..

  9. 9

    இப்போது சுவையான சமோசா தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes