வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)

Vathsala's Samayal
Vathsala's Samayal @vathsala_1934

வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)

Edit recipe
See report
Share
Share

Ingredients

45 நிமிடம்
  1. 1பெரிய வெங்காயம்
  2. 1வாழைப்பூ
  3. 1/4 கிலோகிராம்பொட்டுக்கடலை
  4. 1சிறிய துண்டு பட்டை
  5. 2கிராம்பு
  6. 9பல் பூண்டு
  7. 1சிறிய துண்டு இஞ்சி
  8. 5வரமிளகாய்
  9. 1 டீஸ்பூன் சோம்பு
  10. தேவையான அளவு உப்பு
  11. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. கருவேப்பிலை
  13. கொத்தமல்லி தழை
  14. பொரிப்பதற்கு எண்ணெய்

Cooking Instructions

45 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, சோம்பு, கிராம்பு ஒன்றன் பின் ஒன்றாக போட்டு சிறு அனலில் நன்றாக வதக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூவில் உள்ள நரம்பை எடுத்து அரிந்து மோரில் போட்டு சுத்தம் செய்து குக்கரில் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

  2. 2

    பொட்டுக்கடலையை நைஸ் ஆக அரைத்து கொள்ளவும். இத்துடன் வதக்கிய பொருட்களை அரைத்து, வேகவைத்த வாழைப்பூவை அரைத்து வைத்துக் கொள்ளவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை, மல்லி தழை பிசைந்து வடையை தட்டி, எண்ணெய் நன்றாக காய்ந்தபின் சிறு அனலில் வைத்து பொரித்து எடுக்கவும்.

  3. 3

    இப்பொழுது வாழைப்பூ வடை தயார்.

Edit recipe
See report
Share
Cook Today
Vathsala's Samayal
Vathsala's Samayal @vathsala_1934
on

Similar Recipes