சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake

Nithya Ramesh
Nithya Ramesh @cook_24521047

1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.
3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake

1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.
3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. 1. ஒரு கப் மைதா மாவு
  2. 2. ஒரு கப் சீனி பொடி செய்தது
  3. 3. கால் கப் கோகோ பவுடர்
  4. 4. முக்கால் கப் பால்
  5. 5. ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. 6. ஒரு சிட்டிகை. உப்பு
  7. 7. ஒரு சிட்டிகைபேக்கிங் சோடா
  8. 8. (Dairy milk)சாக்லேட்-4
  9. 9. 50 கிராம். வெண்ணெய்
  10. 10. 2 ஸ்பூன். தயிர்
  11. 11. 2 அல்லது 3. சிறிய சில்வர் கிண்ணம்
  12. 12. ஒரு ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் குக்கரில் உப்பைப் போட்டு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் ஒரு தட்டு வைத்து அடுப்பில் வைக்கவும் 15 நிமிடம் குக்கர் சூடு ஏற வேண்டும்.

  2. 2

    குக்கர் சூடாகும் நேரத்தில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சிறிய பாத்திரத்தில் சாக்லேட் போட்டு 50 கிராம் வெண்ணெய் சேர்த்து அதன்மேல் அந்த சாக்லேட் கிண்ணத்தை வைத்து உருக்கவும்.

  3. 3

    ஒரு சல்லடை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு கப் மைதா, ஒரு கப் சீனி பொடி, கால் கப் கோகோ பவுடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை, அனைத்தையும் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

  4. 4

    சலித்து எடுத்ததில் முக்கால் கப் பால் ஊற்றி 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். உருக்கிய சாக்லேட்டை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்க வேண்டும்.

  5. 5

    சிறிய சில்வர் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் வெண்ணெயை தடவிக் கொள்ளவும். கலக்கி வைத்ததை அந்த சிறிய கிண்ணத்தில் ஊற்றி குக்கரின் மேல் அந்த தட்டில் வைக்கவும்.

  6. 6

    குக்கரை மூடி 10 அல்லது 12 நிமிடம் வேக வைக்கவும். மெல்ல அந்த கிண்ணத்தை (shake) பண்ணவும். நீங்கள் அந்த கிண்ணத்தை (shake) பண்ணும்போது சாக்லேட் தண்ணியா இருக்கக்கூடாது. முழுசாக வேகக்கூடாது, முக்கால்வாசி வெந்த மாதிரி இருக்கணும். கிண்ணத்தை குலுக்கும்போது கேக் மெதுவாக ஆட வேண்டும். பின்பு குக்கரில் இருந்து கேக்கை எடுத்துடலாம். ஆறிய பின்பு அந்தக் கிண்ணத்தில் இருக்கும் கேக்கை தட்டில் கௌத்திகொள்ள வேண்டும். அந்த கேக்கின் மேல் சீனி பொடியை தூவி கொள்ளலாம்.

  7. 7

    கேக்கை நறுக்கும்போது உள்ளிருந்து சாக்லேட் வடிய வேண்டும். சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake) ரெடி..#bake.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Ramesh
Nithya Ramesh @cook_24521047
அன்று

Similar Recipes