பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1கப் பாசிப்பருப்பு
  2. 1கப் பொடித்த சர்க்கரை
  3. 1/2கப் நெய்
  4. 1கைப்பிடி உடைத்த முந்திரி பருப்பை நெய்யில் வறுத்தது
  5. சிறிதுஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    1 கப் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து மெஷினில் கொடுத்து நைசாக பொடித்து வைக்கவும். சலித்து 1 கப் எடுத்து வைக்கவும். சர்க்கரை 1 கப் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைக்கவும்.

  2. 2

    சிறிது ஏலக்காய்தூள் எடுத்து வைக்கவும். 1/2 கப் நெய்யை அடுப்பில் வைத்து உருக்கி எடுத்து வைக்கவும்.

  3. 3

    1 கைப்பிடி உடைத்த முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.பாசிப்பருப்பையும் சர்க்கரையும் கலந்து, உருக்கிய நெய்யை ஊற்றி நன்கு கலக்கி விட்டு, நெய்யில் வறுத்த உடைத்த முந்திரி பருப்பு, ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு கலக்கி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான பாசிப்பருப்பு உருண்டை ரெடி.😄😄

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes