சுவையான தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#leaf
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் தெம்பான தூதுவளை சூப். இது சளி, தும்மல், இருமல் போன்றவற்றை போக்கும் உடனடி மருந்தாகும்.

சுவையான தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)

#leaf
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் தெம்பான தூதுவளை சூப். இது சளி, தும்மல், இருமல் போன்றவற்றை போக்கும் உடனடி மருந்தாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்
  1. தூதுவளை இலைகள்
  2. 5 பல் சின்ன வெங்காயம்
  3. 2 பல் பூண்டு
  4. 1 பச்சைமிளகாய்
  5. 1 தக்காளி
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  8. 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  9. 1/4 டீஸ்பூன் மிளகுதூள்
  10. 400மில்லி தண்ணீர்
  11. கொத்தமல்லி இலைகள்
  12. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் தூதுவளை இலைகளில் உள்ள முள்களை எடுக்க வேண்டும்.

  2. 2

    பின்னர் 5 பல் சின்ன வெங்காயம்,2 பல் பூண்டு,1 பச்சைமிளகாய்,1 தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி தூதுவளை இளைகளை 2 நிமிடம் வதக்கி,1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்,1/2 டீஸ்பூன் மல்லித்தூள்,1/4 டீஸ்பூன் சீரகத்தூள்,1/4 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பின்னர் நன்றாக ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து, ஒரு கடாயில் 400 மில்லி தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். சூடான தூதுவளை சூப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes

More Recipes