ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

கடலை பருப்பு மட்டி உடுப்பியில் ஹயக்ரீவருக்கு செய்யும் இனிப்பு பிரசாதம். கோயிலில் சின்னமோன் சேர்பார்களோ இல்லையோ எனைக்கு தெரியாது. நான் ஏலக்காய், ஜாதிக்காய், அதிமதுரப்பொடிகளுடன் சின்னமோன் சேர்த்தேன் #jan1

ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)

கடலை பருப்பு மட்டி உடுப்பியில் ஹயக்ரீவருக்கு செய்யும் இனிப்பு பிரசாதம். கோயிலில் சின்னமோன் சேர்பார்களோ இல்லையோ எனைக்கு தெரியாது. நான் ஏலக்காய், ஜாதிக்காய், அதிமதுரப்பொடிகளுடன் சின்னமோன் சேர்த்தேன் #jan1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1 கப் கடலை பருப்பு
  2. ½ கப் சக்கரை
  3. 3 கப் தேங்காய் துருவல்
  4. 3 மேஜைகரண்டி, வெல்லம், பொடித்தது
  5. சிட்டிகை உப்பு
  6. ½கப் நெய்
  7. ½ தேக்கரண்டி குங்குமப்பூ
  8. 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  9. ½ மேஜைகரண்டி அதிமதுரம்
  10. ½ மேஜைகரண்டி ஜாதிக்காய் பொடி
  11. ½ மேஜைகரண்டி பட்டை தூள் / Cinnamon Powder)
  12. 20 முந்திரி
  13. ¼ கப் உலர்ந்த திராட்சை
  14. கடலை பருப்பு மட்டி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்கள் சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  3. 3

    ஒரு கிண்ணதில் கடலை பருப்புடன் 2கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் வைத்து வேக வைக்கவும். என்னிடம் விசில் குக்கர் கிடையாது. பெரிய தீயின் மேல் பிரஷர் குக்கரில் வெயிட் சுத்தின உடனே, நெருப்பை குறைத்து 4 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்தேன். குழைய வைக்காதீர்கள். பருப்பு சாஃப்ட் ஆனால் போதும்.
    மிதமான நெருப்பில் அடுப்பின் மேல் ஒரு அடி கனமான சாஸ்பேனில் வெல்லத்துடன் ½ கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. கெட்டியாகி ஸ்ட்ரிங் போல வந்தவுடன் அடுப்பை அணைத்து, தனியாக எடுத்து வைக்க. பாகு தேன் போல இருக்கவேண்டும்.

  4. 4

    ஒரு சின்ன கிண்ணத்தில் குங்குமப்பூ கூட சிறிது வென்னீர் சேர்த்து கரைக்க. நல்ல சிகப்பு நிறம் வரும்.
    மிதமான நெருப்பில் அடுப்பின் மேல் ஒரு அடி கனமான சாஸ்பேனில் சக்கரை கூட 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. (இனிப்பு அதிகம் வேண்டுமானால் உங்கள் விருப்பம் போல சக்கரை அளவை அதிகரித்து கொள்ளுங்கள்) சக்கரை கறைந்தவுடன், வேகவைத்த கடலை பருப்பை சேர்த்து கைவிடாமல் கிளற., 10 நிமிடம்

  5. 5

    பருப்பு முழுக்க வெந்த பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளற. நெருப்பை குறைக்க. 5 நிமிடம் கழித்து வெல்ல பாகு சேர்க்க. குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, பட்டை தூள் சேர்த்து கிளற. ஒரு சின்ன துருவியால் ஜாதிக்காய், அதிமதுரம் துருவி சேர்க்க. சிட்டிகை உப்பு சேர்க்க. நெய் சேர்த்து கிளற. 95% கெட்டியாகி ஹல்வா போல ஆனவுடன் அடுப்பை அணைக்க. மட்டி ரெடி.

  6. 6

    முந்திரி, திராட்சை நெய்யில் வருத்து மட்டியுடன் சேர்க்க. மட்டியை பரிமாறும் கிண்ணத்திர்க்கு மாற்றுக. ஆற வைக்க. ஆற வைக்க. சுவைத்து பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes