கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#jan1#week1

கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)

#jan1#week1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. ஒரு கப் கொள்ளு
  2. 20 சிறிய வெங்காயம் அல்லது இரண்டு பெரிய வெங்காயம்
  3. 6 பூண்டு பல்
  4. அரை கப் துருவிய தேங்காய்
  5. 5 காய்ந்த மிளகாய்
  6. ஒரு துண்டு புளி
  7. தேவையானஅளவு உப்பு
  8. ஒரு டீஸ்பூன் கடுகு
  9. அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  10. அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு
  11. சிறிதுகருவேப்பிலை
  12. தாளிக்க நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெறும் வாணலியில் கொள்ளு பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயம் பூண்டு இவற்றை லேசாக வறுத்து அதன் பின் மிளகாய் வற்றல் தேங்காய் புளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது கொள்ளு பருப்பை இலேசாக பொடி செய்து கொள்ளவும்.

  5. 5

    வதக்கியவற்றை ஆறவைத்து கொள்ளு பருப்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    கடைசியாக கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

  7. 7

    அருமையான கொள்ளு சட்னி ரெடி. இது தோசை, இட்லி, சாதத்துடனும் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes