நூடுல்ஸ் பொட்டல பரோட்டா (Noodles Pottala Parotta recipe in tamil)

மாதம்தோறும் வாங்கும் மளிகை பொருள்களில் நூடுல்ஸ் வாங்காமல் இருந்ததே இல்லை. இந்த கொரோன காலத்திலும் என் வீட்டில் கிச்சன் அறையில் நூடுல்ஸ் பாக்கெட் தான் அதிகமாக அடுக்கி வைத்து இருந்தேன். பொதுவாக நூடுல்சை இரண்டு நிமிடத்தில் செய்து முடித்து விடுவார்கள், அப்படி இல்லாமல் இந்த பொட்டல பரோட்டாவில் நூடுல்சை ஸ்டாப் செய்து ஒரு வித்தியாசமான ரெசிபியை கீழே பதிவு செய்துள்ளேன். #noodles
நூடுல்ஸ் பொட்டல பரோட்டா (Noodles Pottala Parotta recipe in tamil)
மாதம்தோறும் வாங்கும் மளிகை பொருள்களில் நூடுல்ஸ் வாங்காமல் இருந்ததே இல்லை. இந்த கொரோன காலத்திலும் என் வீட்டில் கிச்சன் அறையில் நூடுல்ஸ் பாக்கெட் தான் அதிகமாக அடுக்கி வைத்து இருந்தேன். பொதுவாக நூடுல்சை இரண்டு நிமிடத்தில் செய்து முடித்து விடுவார்கள், அப்படி இல்லாமல் இந்த பொட்டல பரோட்டாவில் நூடுல்சை ஸ்டாப் செய்து ஒரு வித்தியாசமான ரெசிபியை கீழே பதிவு செய்துள்ளேன். #noodles
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா மாவை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை ஐந்து நிமிடம் முதல் 10 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
- 3
ஒரு வாணலில் 2 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். இரண்டு நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் இருந்தால் அதை வடிகட்டிவிட்டு நூடுல்சை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணை, 1/4 கப் பொடிதாக நறுக்கிய வெங்காயம், 1/2 தக்காளி, 1 பச்சை மிளகாய் மற்றும் நூடுல்ஸ் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
பின்னர் அதில் வேக வைத்திருக்கும் நூடுல்ஸை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 6
பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறிய பந்து அளவுக்கு மாவை எடுத்துக் கொள்ளவும். அதை வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
- 7
தேய்த்து வைத்த பரோட்டாவில் 2 கரண்டி அளவுக்கு செய்து வைத்துள்ள நூடுல்சை வைத்து நன்றாக பரப்பி விடவும்.
- 8
இதன் மேல் தேய்த்து வைத்த இன்னொரு பரோட்டாவை மேலே வைக்கவும்.
- 9
சுற்றி இருக்கும் ஓரங்கள் எல்லாம் நன்றாக அழுத்தி விடவும். இதற்கு விரல்கள் அல்லது போர்க் ஸ்பூன் பயன்படுத்தலாம்.
- 10
ஒரு தோசைக்கல்லில் சூடேறிய பிறகு செய்து வைத்திருக்கும் பரோட்டாவை இரண்டு பக்கங்களையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 11
ஒரு வாழை இலையை அடுப்பில் காட்டி சுட்டுக் கொள்ளவும்.
- 12
சுட்டு வாழை இலையின் மேல் செய்து வைத்திருக்கும் நூடுல்ஸ் பரோட்டாவை வைக்கவும். இதன் மேல் 2 கரண்டி நூடுல்சை சேர்க்கவும்.
- 13
பின்னர் இதன் மேல் ஆம்பள இதை வைத்துக் கொள்ளவும். அதன் மேல் தேவையான அளவு சால்னா அவை சேர்த்துக் கொள்ளவும்.
- 14
இப்பொழுது சால்னா மேல் வெங்காயம், தக்காளியை மற்றும் கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும். இதன் மேல் மறுபடியும் 2 கரண்டி நூடுல்ஸ் வைக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- 15
இலையை நன்றாக மழை பொட்டலம் போல் மடித்து நூல் வைத்து கட்டிக் கொள்ளவும்.
- 16
ஒரு கடாயில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு ஸ்டண்ட் அல்லது தட்டு வைத்துக் கொள்ளவும்.
- 17
அந்தத் தட்டின் மேல் செய்து வைத்திருக்கும் பொட்டலத்தை வைத்துக்கொள்ளவும். பின்னர் இதை ஒரு தட்டு போட்டு மூடி 15 நிமிடம் தண்ணீரில் கொதிக்க விடவும்.
- 18
15 நிமிடம் கழித்து பொட்டலத்தை பிரித்தால் சுவையான நூடுல்ஸ் பொட்டல பரோட்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நூடுல்ஸ் குழிப்பணியாரம் (Noodles savoury Paniyaram recipe in tamil)
செட்டிநாடு குழி பணியாரம் தமிழகத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று இதை காரம் மற்றும் இனிப்பு இரண்டு வகையிலும் செய்வார்கள். என் மகளுக்கு இனிப்பு பணியாரம் மற்றும் நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அதனால் அந்தக் குழி பணியாரத்தை நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன். அதற்கான ரெசிபியை இங்கு பார்ப்போம். மிகவும் எளிதாக 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளில் இதுவும் ஒன்று. #noodles Sakarasaathamum_vadakarium -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken noodles recipe in tamil)
#noodlesyippee noodles சை வைத்து நான் செய்த முயற்சி சுவைக்குறையவில்லை Sarvesh Sakashra -
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil)
சென்னையில் ஒரு பிரபல உணவகத்தில் மொறுமொறு ஃபிஷ் பிங்க்கர் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கொரோனா சமயத்தில் உணவகங்கள் மூடி இருந்ததனால் நான் இந்த ஃபிஷ் பிங்க்கர் ருசிக்க பல நாள் காத்திருக்க வேண்டி இருந்தது. அப்பொழுதுதான் இந்த ரெசிபியில் இருக்கும் ஃபிஷ் பதிலாக முட்டை வைத்து செய்து பார்த்தேன். இந்த அசத்தலான ரெசிபியை கீழே காணவும். #worldeggchallenge Sakarasaathamum_vadakarium -
-
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan -
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
டொமாடோ சூபி நூடுல்ஸ் (Tomato Soupy Noodels recipe in tamil)
டொமாடோ சூப் செய்வோம். நூடுல்ஸ் செய்வோம். இப்போது டொமாடோ சூபி நூடுல்ஸ் செய்து சுவைப்போம். Renukabala -
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
ப்ளைன் நூடுல்ஸ்(plain noodles recipe in tamil)
எளிய செய்முறை. நூடுல்ஸ்,வெங்காயம்,தக்காளி சேர்க்காமல் ப்ளைனாக செய்து பாருங்கள். உடனடியாகவும்,சுவையாகவும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
More Recipes
- வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
- வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)
- கோதுமை ஐடியப்பம்(Kothumai idiyappam recipe in tamil)
- பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
கமெண்ட் (4)