சமையல் குறிப்புகள்
- 1
சீரக ரசம் வைக்கத் தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
புளியை கரைத்து வடிகட்டி எடுத்து கெட்டியாக பேஸ்ட் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கடலை பருப்பு,தனியா,மிளகு,வற்றல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 5
பின்னர் அதில் புளி கரைத்து செய்த பேஸ்ட்டை சேர்க்கவும். கொதிக்க விடவும்.
- 6
அதன்பின் மிக்ஸி ஜாரில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும்.
- 7
பின்பு கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 8
எல்லாம் சேர்ந்து கொதித்து, பச்சை வாசம் போனதும், ரசம் நன்கு நுரைத்து வரும்போது இறக்கவும்.
- 9
பின் ரசத்தை ஒரு பௌலில் சேர்க்கவும். பின்பு தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை வற்றல் மிளகாய் சேர்த்து பொரிந்ததும் ரசத்தில் சேர்க்கவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான,ஜீரண சக்தியை அதிகரிக்கும் சத்தான சீரகம் ரசம் சுவைக்கத்தயார்.
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
-
-
-
-
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
* பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)
மிளகு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.உடல் பருமனை குறைக்க உதவுகிறது.மார்பக புற்று நோய், மற்றும் கேன்சர் நோயை வளர விடாமல் தடுக்கின்றது.அஜீரணத்தை தடுக்கின்றது. Jegadhambal N -
செட்டிநாடு ரசம். #refresh1
செட்டிநாட்டில் இந்த ரசம் மிகவும் பிரபலம்.தாளிக்கும் போது மிளகாய் வற்றலும்,பெருங்காயத் தூளும் போடுவதில்லை.கொத்தமல்லிதழைதான் பயன்படுத்துகின்றார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.உ.பருப்பை வறுத்து செய்வதால் எலும்புகளுக்கு தேவையான வலுவை கொடுக்கும்.இதில் சேர்க்கப்பட்டிருக்கும் தனியா,மிளகு,சீரகம் உடலுக்கு நலத்தைக் கொடுக்கக் கூடியதாகும். Jegadhambal N -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
More Recipes
கமெண்ட் (2)