பொரி சாதம்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

#COLOURS3-WHITE இது என் குழந்தைகள் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவு இது என் மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது என் குழந்தைகளுக்காக விருப்பப்பட்டு செய்கின்றேன்

பொரி சாதம்

#COLOURS3-WHITE இது என் குழந்தைகள் விருப்பப்பட்டு சாப்பிடும் உணவு இது என் மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது என் குழந்தைகளுக்காக விருப்பப்பட்டு செய்கின்றேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. 1 1/2 டம்ளர் அரிசி
  2. 4 டேபிள் ஸ்பூன் தாளிப்பு உளுந்து
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1/2 டீஸ்பூன் கடுகு
  5. 2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  6. 10 வரமிளகாய்
  7. 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  8. சிறிதளவுகருவேப்பிலை
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசியை களைந்து 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும் குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பிறகு கடுகு சேர்த்து பொரியவிடவும்

  2. 2

    கடுகு நன்கு பொரிந்தவுடன் உளுந்தம் பருப்பு சீரகம் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து லேசாக பொன்னிறமாக வறுக்கவும் அதன் பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் லேசாக வதங்கியவுடன் அரிசியைக் களைந்து தண்ணீர் வடித்து விட்டு அதனுடன் சேர்க்கவும் இப்போது அரிசியும் நன்கு வதக்கி எடுக்கவும்

  4. 4

    அரிசிக்கு தேவையான தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும் அதன் பிறகு எப்போதும் போல குக்கரை விசில் போட்டு மூடி விடவும் மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அனைத்து விட்டு கிளறி இறக்கவும் இப்போது சுவையான பொரி சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
அன்று

Similar Recipes